May 23, 2016

60 மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்தல் - பெண்கள் மூவர் கைது!

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்திய 3 பெண்களை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.


குறித்த பெண்கள் டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இந்தத் தங்கத்தினை கடத்தி வந்தபோதே சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இவர்களது பயணப்பையினை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது இவர்களது பயணப்பையிலிருந்து 10.5 கிலோ கிராம் தங்கத்தினை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment