பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெற்ற விதம் குறித்து தான் திருப்தியடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
முன்னர் நடைபெற்ற தேர்தல்களை விட இன்று நடைபெற்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது, பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறாதது குறித்து நான் மகிழ்சியடைந்துள்ளேன்.
தேர்தல்கள் முடிவடைவதற்கு ஓரு சிலமணிநேரத்திற்கு முன்னர் எங்களிற்கு சில முறைப்பாடுகள் கிடைத்தன.
226 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன, இவை பாரிய சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் இல்லை,மக்கள் வெற்றியையும் தோல்வியையும் சமமாக எடுக்க வேண்டும், இறுதி முடிவுகள் வெளியான பின்னர் எவரையும் துன்புறுத்தகூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment