August 3, 2016

நந்திக்கடல் பாலத்தை மறித்து மக்கள் வீதி மறியல் போராட்டம்!

மேற்படி போராட்டம் பற்றி வன்னி பாராளுமன்ற உறுப்பினர். சி.சிவமோகன் கருத்து கூறுகையில்,


இராணுவம் முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்க எடுத்த முயற்சிகளை கண்டித்து மக்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

ராஜபக்ஸ காலத்தில் 2014ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி எடுத்தது. அதேதடம் மாறாது செயல்படும் மைத்திரி – ரணில் ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்க சிங்கள அரசுகளுக்கு எந்தவொரு தார்மீக உரிமையுமில்லை. இன நல்லிணக்கம் என்பது வார்த்தைகளில் மட்டும் இருக்கக்கூடாது. செயலில் நல்லாட்சி அரசின் நம்பிக்கை வெளிவர வேண்டும் என்றார்.முல்லை மாவட்டம் போரிலே சின்னாபின்னமாக்கப்பட்ட மாவட்டம். எனவே இராணுவம் முற்றாக மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி தமிழ் மக்களின் சமூக வாழ்விற்கு உதவ முன் வரவேண்டும்.

பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளின் அறிக்கைகளுக்கும் வார்த்தைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிக கரிசனை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம்  காட்ட நல்லாட்சி அரசு முன்வர வேண்டும் என்றார்.










No comments:

Post a Comment