அம்பாறையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) கலந்து கொண்ட கூட்டத்தில், முன்னாள்
அமைச்சர் பி.தயாரத்ன உரையாற்றிக் கொண்டிருந்த போது ஐக்கிய தேசியக்
கட்சியின் ஆதரவாளர்கள் கூக்குரலிட்டமையால் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன உரையாற்றுவதற்காக எழுந்து சென்ற போது ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ஒருவர் அவரைப் பார்த்து நகைப்புக்கிடமான முறையில் சத்தமிட்டார்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர், அந்த ஐ.தே.க. அமைப்பாளரை கடுமையாக சாடிப்பேசியதுடன் ஐ.தே.க.வின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவன் நான், என்னை எவரும் பேசமுடியாது என்று கடும் வார்த்தை பிரயோகங்களால் திட்டித்தீர்த்தார்.
முன்னாள் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது, அம்பாறை மாவட்டத்தின் மற்றுமொரு பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் அவரை பேசவிடாமல் தடுத்தனர்.
இதன் போது கூட்டத்தில் பெரும் பதற்றமான நிலையேற்பட்டதுடன் சிறிது நேரத்தில் முன்னாள் அமைச்சர் தமது உரையை முடித்துக் கொண்டு அவரது இடத்தில் அமர்ந்து கொண்டார்.

No comments:
Post a Comment