தமிழ்த்தேசத்துரோக் கும்பல்களிலிடம் இருந்து பாராளுமன்ற ஆசன மீட்புச் சமரை ஆரம்பித்துள்ள ஜனநாயகப் போராளிகள் இன்று வலிவடக்குப் பிரதேசத்தில் உள்ள இரு அகதிமுகாம்களுக்குள் நுழைய முற்பட்ட போது அங்கு கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார்கள்.
ஜனநாயகப் போராளிகள் முகாம்களுக்குள் நுழைய முற்பட்ட வேளை அங்கிருந்த மக்கள் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. எந்தவொரு அரசியல்வாதியும் எங்கள் முகாம்களுக்குள் காலடி வைக்கக் கூடாது என்று அவர்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார்கள்.
குறித்த மக்களின் எதிர்ப்பையடுத்து அதற்கான காரணம் என்ன என அவர்களை வினாவிய போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இவை.
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இருக்கும் எங்களுக்கு எந்த அரசியல்கட்சிகளும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் வசமுள்ள பிரதேசசபையோ அல்லது மாகாணசபையோ எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. வாக்குப் பிச்சை கேட்க மாத்திரிம் அவர்கள் இங்கு நுழைந்திருக்கின்றார்கள்.
எமக்குரிய நீரைக் கூட அவர்களால் பெற்றுத் தரமுடியவில்லை. எங்கள் இடங்கள் இருக்கும் கோலங்களைப் பாருங்கள். நாங்கள் எங்கு சென்றாலும் நீ முகாம் ஆள்தானே என இழிவு படுத்துகின்றார்கள். எங்களுக்கு அது செய்வோம், இது செய்வோம் என தேர்தல்கள் வரும் போது சொல்லிவிட்டு பின்னர் மாயமாகிவிடுகின்றார்கள் என ஏராளமான குற்றச்சாட்டுக்களை முகாமுக்குள் நுழைய முயன்ற போராளிகளுக்கு எறிகணைகள் போல் ஏவினர்.
இவற்றையெல்லாம் கேட்ட ஜனநாயகப் போராளிகள் குறித்த முகாம் மக்களுக்கு தாங்கள் யார் என்பதை தெரியப்படுத்தனர். முன்னாள் புலிப் போராளிகள் தங்களிடத்தில் வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து சந்தோசமடைந்த குறித்த மக்கள் அவர்களுக்கு தமது முழுமையான ஆதரவையும் வாக்குகளையும் அள்ளி வழங்குவதாகத் தெரிவித்து அவர்களை உபசரித்து அனுப்பியுள்ளனர்.

No comments:
Post a Comment