August 3, 2016

அழிவின் பின் மீண்டெழுகிறதா யாழ். நூலகம்!

நூலகம் என்பது தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். அந்த வகையில் ஆசியாவிலேயே இல்லாத பெருமளவான நூல்களுடன் கம்பீரமாய் தோற்றமளித்த ஒன்றே யாழ். நூலகம்.


எனினும், கடந்த ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற சில கசப்பான சம்பவங்களே யாழ். நூலகம் எரியூட்டப்பட்டமைக்கான காரணம் என நோக்கப்படுகின்றது.

எவ்வாறான கசப்பான சம்பவத்தின் பின்னணியில் இந்த நூலகம் எரிக்கப்பட்டிருந்தாலும், யாழ். நூலகம் எரிக்கப்பட்டதே ஒரு பாரிய கசப்பான சம்பவமாகவே நோக்கப்பட வேண்டும்.

இன்று உலகின் பல பாகங்களில் இருந்தும் யாழ். நூலகத்தை நோக்கி கல்விமான்கள் படையெடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவயைான நூல்கள் இன்றும் இங்கு கிடைக்கப்பெறுகின்றன.

எனினும், யாழ்.நூலகத்துக்கு வரும் கல்விமான்கள் பழமையான அந்த நூல்களை தேடுவதிலேயே ஆர்வம் காட்டியுள்ள போதிலும் அவர்கள் ஏமாற்றத்துடனேயே திரும்பவேண்டியுள்ளது.

தமிழ் சமூகத்தின் கல்வி சொத்து என யாழ். நூலகம் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் இன்று அது வெறும் வார்த்தை வடிவத்திலேயே காணப்படுகின்றது.

யாழ். நுலகம் எரிக்கப்பட்டமையானது பலரும் தமிழ் சமூகத்திற்கு பாரிய இழப்பாக கருதுகின்றனர் எனினும் இது ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஏற்பட்ட பாரிய இழப்பாகவே காணப்படுகின்றது.

இன்றும் முக்கியத்துவம் வாய்ந்த நூல்களை தேடி யாழ். நுலகம் வருவோரிடத்தில் காணப்படும் தாகம் என்று தனியும்?

No comments:

Post a Comment