சீபா மற்றும் எட்கா ஆகிய வர்த்தக உடன்படிக்கைகள் ஆசிய பிராந்திய வலயத்திற்கு நன்மையை ஏற்படுத்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சீபா உடன்படிக்கையும், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எட்கா உடன்படிக்கையும் பல நன்மைகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு ஆசிய புலம்பெயர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஏதுவாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு காணப்பட்ட தடைகளை இலங்கை விரைவில் களைந்து எறியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தேவையான உட்கட்டுமான வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment