October 10, 2015

நல்ல மனிதர்களை உருவாக்கும் பணியின் மூலவேராக திகழ்பவர்கள் ஆசிரியர்களே: சரா.புவனேஸ்வரன்!

நல்ல மனி­தர்­களை உரு­வாக்­கு­கின்ற பணியின் மூல­வே­ராகத் திகழ்­ப­வர்கள் ஆசி­ரி­யர்­களே. அவர்கள் வணக்­கத்­திற்கும், மதிப்­பிற்கும் உரி­ய­வர்­க­ளாக
சமூ­கத்தில் இடம்­பி­டித்­தி­ருந்­தனர். ஆனால் இன்று அத்­த­கைய நிலை­மாறி ஆசி­ரி­யர்­களை மதிக்­காத சமூகம் உரு­வா­கி­வ­ரு­வது கண்டு மன­வே­தனை அடை­கின்றேன் என இலங்கைத் தமிழர் ஆசி­ரியர் சங்­கத்தின் பொதுச் செய­லாளர் சரா.புவ­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.
கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லையில் நடை­பெற்ற ஆசி­ரி­ய­தின விழாவில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்
அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது
தமது கட­மை­களை சிறப்­பா­கவும், சீரா­கவும் ஆற்றி அத­னூ­டாக நல்ல அறு­வ­டை­க­ளைப்­பெற்று தனி­ம­னித வாழ்க்­கை­யையும், சமூ­கத்­தையும் உயர்­வான நிலைக்கு கொண்­டு­வந்­த­வர்கள் ஆசி­ரி­யர்­களே. அவர்­களின் கண்­டிப்பும், அவர்கள் வழங்­கிய தண்­ட­னையும் ஏற்­பு­டை­ய­தாக மாணவர் மனங்­களில் விழிப்பை உண்­டாக்­கி­யது.
ஆனால், இன்று அப்­ப­டி­யல்ல. கண்­டிப்பை ஏற்­றுக்­கொள்ளும் மாண­வரும் இல்லை. சாத­னை­க­ளுக்கு உரிமை கோரக்­கூ­டிய ஆசி­ரி­யர்­களும் இல்லை. காரணம் ஒரு மாண­வனின் சாத­னையில் அதிக பங்­கா­ளிகள் உள்­ளனர். அவர்­களை இனங்­காண்­ப­திலும், வணங்­கு­வ­திலும் மாண­வர்­க­ளுக்கு பல்­வேறு சிக்­கல்கள் உள்­ளன. இதனை உண­ராத சமூகம் ஆசி­ரி­யர்­களை வணங்கும், வாழ்த்தும் என்று நாம் எதிர்­பார்க்க முடி­யாது. மாறாக சாத­னைக்கு உரி­ய­வரை மாணவன் எப்­பொ­ழுது சுட்­டிக்­காட்­டு­கின்­றானோ அன்­றுதான் நாம் மதிப்­பிற்கும், மரி­யா­தைக்கும் உரி­ய­வர்­க­ளாக மாறு­கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment