திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி, ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 10 வது நாளாக நீடிக்கிறது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கூறி, ஈழத் தமிழர்கள் 15 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 30ம் தேதி 2 பேர் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர். முகாமில் இருந்து மற்றவர்களையும் விடுவிக்கக் கோரி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 11 பேர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் அனைவரும் கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கட்டாய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, அந்த முகாமில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுரேஸ்குமார், அண்மையில் தனது அறையில் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி, ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 10வது நாளை எட்டியுள்ளது.

No comments:
Post a Comment