June 20, 2016

இந்தோனேஷியாவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் 35 பேர் பலி; 25 பேரை காணவில்லை!

இந்தோனேஷியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை.


மத்திய ஜாவா முழுவதும் சனிக்கிழமை முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் மிதக்கின்றன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

இது குறித்து இந்தோனேஷியாவின் பேரிடர் மேலாண்மை அமைச்சக செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ வெளியிட்ட அறிக்கையில், ‘‘மத்திய ஜாவாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 35 பேர் பலியாகி யுள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 25 பேரை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம்’’ என்றார்.

மழை தொடரும்

மழை விடாமல் தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பெரும் பாலான மக்கள் தங்களது வீடுக ளின் கூரைகள் மீது தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப் படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக தற்காலிக குடில்களும் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment