பாரிசில் வேலை இல்லாமல் சுற்றும் ஒரு கலைஞர். அவரின் தேவைக்காக ஈழத்து கலைஞர்களை கௌரவிக்கிறேன் என்று கூறி ஒரு நிகழ்ச்சியை
ஏற்பாடு செய்கிறார்.
ஏற்பாடு செய்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஒரு கலைஞரை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார். அதோடு லண்டனில் தற்போது பிரபலமாக இருக்கும் ஒரு ஈழத்து கலைஞரையும் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்.
அந்த ஈழத்து கலைஞனிடம் எங்களுடைய கலைஞர்களை நான் வளர்க்காமல் யார் வளர்ப்பார்கள் என்ற வசனங்களை எல்லாம் சொல்லி ஒரு வழியாக அவரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்கிறார்.
அந்த ஈழத்து கலைஞனிடம் எங்களுடைய கலைஞர்களை நான் வளர்க்காமல் யார் வளர்ப்பார்கள் என்ற வசனங்களை எல்லாம் சொல்லி ஒரு வழியாக அவரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்கிறார்.
கடைசியில் அந்த நிகழ்ச்சி மேடையில் இந்திய சினிமா பிரபலமும், அந்த ஈழத்து கலைஞர்களும் எப்படி கௌரவிக்கப்படுகிறார் என்பது கதை.கதையின் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை ஈழத்து கலைஞன் எப்படியெல்லாம் அவமானப்படுகிறான் என்று ஆணி அடித்தார் போல் கூறியிருக்கின்றனர்.
அதோடு மன்மதன் பாஸ்கி கதையின் இறுதியில் கூறிய வசனம் கதைக்கு ப்ளஸ்.உண்மையான கருத்து, அதை கொஞ்சம் காமெடி கலந்து கதை நகர்கிறது. அதோடு ஸ்ரீ அங்கிள் என்பவர் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்,
அதோடு மன்மதன் பாஸ்கி அவர்கள் இன்னும் கொஞ்சம் எமோஷனுடன் சொல்ல வந்த கருத்தை கூறியிருக்கலாம்.அதோடு இந்த படைப்பின் நீளம் ரொம்பவும் அதிகம், பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.ஒவ்வொரு ஈழத்து கலைஞர்களின் கஷ்டங்களையும் அற்புதமாக சொல்லியமைக்கு இக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
மன்மதன் பாஸ்கி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் காமெடி படைப்பு ஊக்குவிப்பு. ஈழத்து கலைஞர்களின் மன வேதனையை சொல்லும் ஓர் அற்புதமான படைப்பு.
No comments:
Post a Comment