கனடா-எற்றோபிக்கோ உயர்நிலை பாடசாலையில் விசேட தேவைகள் உதவியாளராக கடமையாற்றிய ஊழியர் ஒருவர் மீது 13-வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம்
செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 43-வயதுடைய குறிப்பிட்ட சந்தேக நபர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 2010 ஒக்டோபர் மாதம் முதல் 2011 டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமாக நடைபெற்று வந்த புலனாய்வுகள் மூலம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டது ஒரு 13-வயது பெண். இச்சம்பவம் Martingrove Collegiate Institute –ல் இடம்பெற்றதாகவும் அங்கிருந்து வியாழக்கிழமை கடிதம் ஒன்றின் மூலம் பெற்றோர்களிற்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் கடிதத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் Ralph Nigro தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை மாலை 6.30 தொடக்கம் 7.30-வரை பாடசாலை கேட்போர் அரங்கத்தில் பெற்றோர் கூட்டம் ஒன்று இடம்பெற இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. சந்தேக நபர்Richard “Rick” Ford என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment