November 2, 2014

பிரான்சில் நடைபெற்ற லெப்கேணல் நாதன், கப்டன் கஐன் ஆகியோரின் 18-வது ஆண்டு வீரவணக்கம்!

தாயக விடுதலையை நெஞ்சில் சுமந்து புலம்பெயர் மண்ணில் நிதிப் பொறுப்பாளராக அயராது உழைத்த லெப்.கேணல் நாதன், தமிழ் மக்களின் செய்திகளை தாங்கி தாயகத்திற்கும், புலத்திற்கும் செய்தி உறவுப்பாலமாக திகழ்ந்த
ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியர் கப்டன் கஐன் ஆகிய இருவரும் சிறீலங்கா அரசின் அடிவருடிகளின் அரூபரகரங்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பாரிசு மண்ணில் வீரகாவியமாகி 18 ஆண்டுகள் சென்றுவிட்டன. 


இவர்கள் துயில்கொள்ளும் துயிலும் இல்லம் அமைந்துள்ள ஒபவில்லியே என்ற இடத்தில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 2.00 மணிக்கு மாவீரர்களை நினைவு கூரப்பட்டது. பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து கப்டன் கஐன் அவர்களுடைய சகோதரர்கள் ஈகைச்சுடரினையும், மலர்மாலை ஏற்றி வைக்கப்பட்டு துயிலும் இல்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. 


அகவணக்கத்தைத் தொடர்ந்து மக்களின் சுடர் வணக்கமும், மலர்வணக்கமும் இடம்பெற்றன. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வில் மாவீரர் நினைவுரையுடனும், உறுதிமொழியுடன் வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment