புயலாகச்சீண்டும் எதிரியின் அடக்குமுறை அழுத்தங்களை எல்லாம் மலையாகத்தாங்கி நிற்கும் எமது மக்களை நான் பாராட்டுகின்றேன்.
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்-
தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் அவசர வேண்டுகோள்
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!
எதிர்வரும் 26.12.2014 அன்று எமது தாயகப்பிரதேசங்கள் உட்பட இந்து சமுத்திரத்தின் கரையோரப்பகுதிகளைத் தாக்கி இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்டவர்களைக் காவு கொண்டதோடு, மிகப்பெரும் பொருள் அழிவையும் ஏற்படுத்தி உலகமக்களின் மனங்களிலே ஆழமாகப் பதிந்த ஆழிப்பேரலையின் (சுனாமி) பத்தாம் ஆண்டு நினைவு என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
2004 ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட எமது தேசத்து உறவுகளுக்கு உலக நாடுகளின் நிவாரணங்கள் முழுமையாகக் கிடைக்காமல் சிங்கள அரசு தடைசெய்த போதும், பாதிக்கப்பட எமது மக்களுக்கான நிவாரணப் பணிகளை புலம்பெயர்ந்த மக்களின் பெரும் பங்களிப்பினால்அன்று இயலுமானவரை நிவர்த்தி செய்திருந்தோம்.
ஆனாலும், ஆழிப்பேரலையின் அனர்த்த அழிவுகளையும், தமிழின அழிப்புப்போரின் வடுக்களையும்,வலிகளையும் தொடர்ந்தும் தாங்கி வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் அவலம் நிறைந்த வாழ்வோடு எமது தாயக உறவுகள் அல்லலுறுகின்றார்கள். அவர்களின் துன்பம் நிறைந்த அன்றாட வாழ்வை மேலும் சீரழிக்கும் வகையில் இயற்கையும்காலத்திற்கு காலம் சீற்றம் கொள்கிறது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தமிழர் தாயகப்பகுதியின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இயற்கை அனர்த்தங்களினாலும், போரினாலும் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரங்களை மீளவும் கட்டியெழுப்பி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய பாரியகடப்பாடு புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது கைகளிலேயே உள்ளது. இந்த மக்களுக்கான அவசியமான நிவாரணப் பணிகள் உடனடியாக செய்யப்பட வேண்டியதன் தேவையைக் கருத்தில் கொண்டு புலம்பெயர்ந்து வாழும் அனைத்து மக்களிடமும் அவசர வேண்டுகோளை விடுக்கிறோம்.
எனவே, அன்பான மக்களே!
எமது தேசத்து மக்களின் மறுவாழ்வு திட்டங்களை முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டு சுவிஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட உறவுக்கு கைகொடுப்போம் அமைப்பின் செயற்பாட்டாளர்களும், மனித நேயப்பணியாளர்களும் தங்கள் இல்லங்கள் தேடி வரும் போது, எம்மால் அடையாளப்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட படிவங்கள் ஊடாக தங்களால் இயன்ற பங்களிப்புக்களை மனம் உவந்து வழங்கிஎமது உறவுகளின் மறுவாழ்விற்கு கரம் கொடுக்கும் வண்ணம் உரிமையுடன் வேண்டுகின்றோம்.
மேலதிக தகவல்களுக்கு: கஜன் 0786876371,சிவலோகநாதன் 0786629306, ரகுபதி 0789650918
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

No comments:
Post a Comment