வித்தியாவின் மரணம் தொடர்பில் அமைதியான முறையில்
தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய
பாடசாலை உயர்தர மாணவர்கள்.
இன்று பாடசாலையின் முன்வாயிலில் 12 மணியளவில் ஒன்று கூடிய
மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை தாங்கிய அட்டைகளை கையில் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்கால சிற்பிகளை சீரழிக்காதே, பெண்களுக்கெதிரான வன்முறை சட்டமூலத்தை வலுப்படுத்துங்கள், பெண்களை பெண்களாய் மதியுங்கள். காமுகர்களை சமூகத்தை விட்டு விரட்டுவோம் போன்ற சுலோகங்கள் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பயன்படுத்தப்பட்டன.
மாணவர்களாகவே முன்வந்து ஏற்படுத்தப்பட்ட இவ் அமைதிப் போராட்டம் சுமார் 20 நிமிடம் வரையில் இடம்பெற்றது.

No comments:
Post a Comment