கொட்டதெனியாவ சிறுமி சேயாவை கொலை செய்தமை தானே என சமன் ஜயலத் எனப்படும் நபர் வாக்குமூலமளித்துள்ளார்.இக்கொலை தொடர்பில் ஏற்கனவே வாக்குமூலமளித்திருந்த கொண்டயா எனப்படும் துனேஷ்
பிரியசாந்த என்பவரின் சகோதர னான இவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை கட த்திச்சென்றது எவ்வாறு என்பது தொடர்பில் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார். சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி , கொலைசெய்தமை தானே என அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்தின் சாரம்சம் வருமாறு:
” திறந்திருந்த ஜன்னல் ஊடக கட்டிலில் காலொன்றை வைத்து வீட்டுக்குள் பாய்ந்துகொண்டேன். அப்போது குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்தனர். எப்படியாயினும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் சிறுமியை அணைத்துக்கொண்டு ஜன்னலின் ஊடாக வெளியே பாயந்தேன். பின்னர் இருட்டில் சிறுமியை தூக்கிக்கொண்டு மணல் வீதியின் ஊடாக சென்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ” அன்று பிள்ளையின் வீட்டுக்குச் சென்றபோது அவரது அம்மா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பது ஜன்னலின் ஊடாக தெரிந்த து. எனினும் அப்போது வீட்டுக்குள் செல்வதற்கு வழியிருக்கவில்லை, பிள்ளைகளும் இருக்கின்றன, வீட்டில் ஆட்கள் இருப்பார்கள் என பயம் ஏற்பட்டது, பின்னர் இரவாகும் வரை நடந்து திரிந்தேன்.
நான் மீண்டும் வரும்போது அறையில் மின்குமிழ் எரிந்துகொண்டிருந்தது. அப்போது நினைத்துக்கொண்டேன் நான் கட்டாயம் எதையேனும் செய்வேன் என்று . பின்னர் ஜன்னல்கள் அருகே சென்று ஜன்னல்களை திறக்க முயன்றேன். இதன்போது ஒரு ஜன்னல் திறந்தே இருந்தது. பின்னர் அதனூடாகவே கட்டிலில் கால் வைத்து உள்ளே நுழைந்தேன், அப்போதும் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். பின்னர் உள்ளே சென்று வீட்டினுள் கத்தியொன்றை தேடினேன். எனினும் கத்தியொன்று இருக்கவில்லை.
கத்தியொன்று இன்றி பெண் அருகில் செல்லும்போது அவர் அலறினால் என்ன நடக்கும் என எனக்கு பயமும் ஏற்பட்டது. அவ்வாறு நடந்தால் எல்லோரும் வந்து பெரிய பிரச்சினை ஏற்படும் என தோன்றியது, இதனால் முடிவை மாற்றிக்கொண்டேன். அப்போது பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்தனர். நான் பிள்ளையை கொண்டு செல்ல தீர்மானித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இதன்போது அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளமைகண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , சிறுமியின் தாக்குதலில் இக்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment