October 8, 2015

காவல்துறையில் கறுப்பு ஆடுகள் களையெடுக்கப்பட வேண்டும் – பழ.நெடுமாறன்!

காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளை களையெடுத்தால் ஒழிய யுவராஜ் போன்ற சமூக குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாது என புதியதலைமுறைக்கு பழ.நெடுமாறன் பேட்டியளித்தள்ளார்.


இன்று ராமநாதபுரம் மாவடடம் பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழர் எழுச்சிப்பயணம் மேற்கொனடு பேசினார் பின் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் முழ்கடிக்கப்பட்ட மீனவர் வில்வராஜ் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறதல் கூறினார். பின் செய்தியாளாகளிடம் பேசும் போது தமிழக மீனவர்களின் பிரச்சனை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நீட்டித்துவருகிறது. இலங்கைகடற்படையினரிடம் இருந்து பாதுகாப்பு தரவேண்டிய இந்திய கடறபடை மற்றும் கடலோரகாவல்படை தனது கடமையை செய்யத்தவறியதால் 500 க்கும் மேற்பட்ட அப்பாவிமீனவர்கள கொள்ளப்பட்டார்கள வில்வராஜ போன்ற மீனவக்குடும்பங்கள் அனாதையாக்கப்பட்டுவருவது.தொடர்கதையாகிவருகிறது தமிழக மீனவர்களுக்காக நாடளுமன்ற உறுப்பினர்கள குரல் கொடுக்க வேண்டும் தமிழக முதலமைச்சரும் இந்திய பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பாதிக்கப்பட்ட வில்வராஜ குடும்பத்தக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் போரில் யார் யார் இனப்படுகொலைமற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டர்களோ அவர்கள் ஆட்சிப் பொறுப்பிலும் முக்கிய பதவிகளில் உள்ளனர். அப்படி இருந்தும் அமெரிக்கா தன்னுடைய புவிசார் நலனுக்காக இந்துமாக கடலில் தனது ஆதிக்கத்தை கொன்டுவரும் பொருட்டு இலங்கைக்கு ஆதரவாக ஒரு தீர்மாணத்தை கொன்டுவந்துள்ளதாக குற்றம் சுமத்திய அவர் மேலும் இலங்கையில் போர்முடிந்து ஆறு ஆண்டுகளாகியும் தமிழகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் அவர்களை அடைத்துவைத்து மனித உரிமை மீறல் செயலில்ஈடுபட்டுவருகிறது ஆகவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment