மல்லாகம் புகையிரத நிலையத்தில் அடிப்படை வசதிகள் எவையும் செய்யப்படாமையால் புகையிரதப் பாயணிகள் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.
தற்போது யாழ்ப்பாணத்தில் மழை காலம் ஆரம்பித்துள்ளது இந்த நிலையில் புகையிரத நிலையத்தில் பயணிகள் தரித்து நிற்பதற்குக் கூட புகையிரத மேடையில் கூரைகள் எவையும் அமைக்கப்படாமையால் பயணிகள் மழை பெய்யும் வேளையில் பலத்த சிரமத்துக்கு உள்ளாகின்றார்கள்.
புகையிரத நிலைய அதிபரின் அறையும் கூட ஒரு சரக்கு ஏற்றி இறக்கும் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறையிலும் பயணிகள் தரித்து நிற்பதற்குக்கூட வசதிகள் அற்ற நிலையே காணப்படுகின்றது.
இதனையிட்டு அந்தப் பகுதி மக்கள் பல தடவைகள் புகையிரத திணைக்களத்துக்கு அறிவித்தும் இது வரையில் எந்த வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
குறிப்பாக மழை பெய்யும் நேரத்தில் புகையிரதத்தில் இறங்குபவர்களின் நிலைமையோ சொல்லும் தரம் அன்று. தமது பொருள்களையும் மழையில் நனையவிட்டு பலவேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.

No comments:
Post a Comment