October 8, 2015

போர்க்குற்ற விசாரணைக்கான தலைமையைக் கனடா ஏற்க வேண்டும் – கனடியத் தமிழ் கண்சவேட்டிவ் அமைப்புக் கோரிக்கை.!(படங்கள் இணைப்பு)

கண்சவேட்டிவ் கட்சியானது 2006ம் ஆண்டில் போரினால் பாதிப்புற்றவர்களிற்கான நிவாரணமாக 450 மில்லியன் டொலர்களை வழங்குவதாகக் (490 கோடி ரூபாய்கள்) குறிப்பிட்டிருந்தது. எனினும் அப்போது போர் இடம்பெற்றபடியால் அது இயலாமல் போனது.

எனவே கனடியப் பிரதமர் ஹாப்பரும் அவர் சார்ந்த அரசும் இந்தப் போர்க் குற்ற விசாரணை மற்றும் மீளிணக்கத்திற்கான முயற்சி, இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்தும் முயற்சி என்பனவற்றில் காத்திரமாகப் பங்களிக்க வேண்டுமென கனடியத் தமிழ் கண்சவேட்டிவ் அமைப்பு கேட்டுக் கொண்டதுடன்,
அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமைக் கூட்டத் தொடரில் “கலப்பு விசாரணை” தான் வேண்டுமென கனடா எடுத்துக் கொண்ட முடிவோடு பெல்ஜியம், அயர்லாந்து, நெதர்லாந்து, நோர்வே மற்றும் பிரான்ஸ் என்பன இணைந்து செயற்பட்டது நல்லதொரு முன்னுதாரணம் என்றும், அதனைத் தொடர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதோடு,
கடந்த 2013ல் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்ததின் மூலம் கனடா காத்திரமாகப் பதிவு செய்த புறக்கணிப்பை போன்ற நடவடிக்கைகளைத் தொடர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதோடு ஐக்கிய நாடுகளவையின் வேண்டுகோள்கள் பரிசீலிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டது.
குறிப்பாக புலம்பெயர்ந்த தேசங்களில் கோவில்கள் தனிப்பட்ட வியாபாரங்களை விடுதலைப் புலிகள் வைத்திருந்தார்கள் எனவும் அவர்கள் இல்லாத காரணத்தால் அச் சொத்துக்களை ஈழத்தில் இன்னல்படும் அகதிகளின் நலன்களிற்காகச் செலவிடும் பொறிமுறையை அமைக்க மேற்குலக நாடுகள் உதவ வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளவையின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமெனவும் கனடியத் தமிழ் கண்சவேட்டிவ் அமைப்பு தனது அறிக்கையில் கேட்டுள்ளது.
ஆங்கில மொழியிலான அறிக்கை http://www.constam.ca/?page_id=14
-30-

No comments:

Post a Comment