August 18, 2015

பொத்துவிலில் பதட்டம்: இரவோடிரவாக வைக்கப்பட்ட சிலைகளே காரணமாம்!(படங்கள் இணைப்பு)

பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள ‘வட்டி’ எனும் இடத்திலுள்ள அரச காணியில் தேர்தலன்றிரவு இரவோடிரவாக வைக்கப்பட்ட இரண்டு சிலைகளின் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை
பொத்துவிலில் பதட்டம் நிலவியது.
நேற்று செவ்வாய்கிழமை அதிகாலையில் பிரதான வீதியால் செல்கின்ற பொது மக்கள் வட்டி எனும் இடத்தில் மூன்றடி உயரத்தில் புத்தர் சிலையொன்றும் விநாயகர் சிலையொன்றும் அருகருகே வைக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்று பொதுமக்கள் ஒன்று கூடிய பின் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களிடையே இன முறுகல் ஏற்பட்டது.
குறித்த இடத்துக்கு விஜயம் செய்த பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் பிரதேச செயலாளர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர்களை அழைத்து உரிமை கோரப்படாத இச்சிலை வைப்பு காரணமாக ஊரில் ஏற்பட்டுள்ள இனமுறுகல் நிலைமை பற்றிவிளக்கமளித்தனர்.
இன முறுகலை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக கூடியிருந்த தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களை கலைந்து செல்லுமாறும் ஒரு மனித்தியாலத்துக்குள் ஊரில் சமாதானத்திற்குப் பங்கம் இல்லாத சுமூகமான முடிவொன்றை நீதிமன்றம் மூலம் எடுப்பதாக ஏ.எஸ்.பி.ஜயரட்ன உறுதியளித்தார்.
இச்சிலைகள் வைக்கப்பட்டிருந்த பிரதேசம் காலாகாலமாக தமிழ்மக்களுக்குச் சொந்தமான காணி என்றும் அண்மைக்காலமாக இக்காணியை சுவீகரித்து பொது அமைவிடங்களை அமைக்க முன்னாள் தவிசாளர் திட்டம் தீட்டியிருந்ததாகவும் பொதுமேடைகளில் பேசியதாகவும் அறியவருகிறது.அதன் எதிரொலியாக இச்சிலைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
காரைதீவு நிருபர்-
untitled.1png
untitled

No comments:

Post a Comment