August 18, 2015

அமைச்சு பதவியை ஏற்க மாட்டோம்-மாவை சேனாதிராஜா!

தமிழ் மக்களின் விடிவுக்காக தாம் தொடர்ந்து உழைக்க உள்ளதாகவும் மத்திய அரசு அமைச்சு பதவிகளை தந்தால் அதனை தாம் ஏற்கபோவதில்லை எனவும் தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக யாழ்.மாவட்டத்தில் தெரிவாகியுள்ள மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.யாழ்.மத்திய கல்லூரியில் இன்றைய தினம் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்தது முடிவுகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை எட்டாது விட்டாலும் பெருமை பட கூடிய அளவுக்கு தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 65 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்து ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர்.
தமிழ் மக்களின் விடிவுக்காக நாங்கள் உழைப்போம் என உறுதி வழங்குகின்றோம்.
அமைச்சு பதவியை ஏற்க மாட்டோம்.மத்திய அரசு அமைச்சு பதவியை தந்தால் அதனை நாம் ஏற்று கொள்ள மாட்டோம்.
தேசிய அமைச்சு அமைத்தால் நாங்கள் அமைச்சரவையில் இணையவேண்டும் என்ற கருத்து உண்டு ஆனால் அது நிச்சயம் இல்லை நாங்கள் அமைச்சு பொறுப்பை எடுக்கமால் அதில் சம்பந்தப்படாமல் பங்கு பெறாமல் தேசிய சபை அமைக்கப்பட்டால் நாம் அதில் இணைந்து செயற்படுவோம். அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் எமது இனப்பிரச்சனை மற்றும் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வை எட்டுவதற்கான முன் மொழிவை அந்த சபையின் மூலம் முன் வைப்போம் என்றார்.

No comments:

Post a Comment