October 8, 2015

கலப்பு நீதிமன்று தமிழர்களின் அடுத்த தெரிவு என்ன? கனடாவில் விசேட ஆலோசனை!

கனடிய மனிதவுரிமை மையம் கலப்பு நீதிமன்று தொடர்பாகவும் ஈழத்தமிழர்களின் இது குறித்த நிலைப்பாடு தொடர்பாகவும் ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டமொன்றை
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணி வரை நடத்தவுள்ளது.
கடந்த ஆண்டு கனடாவின் 25 பிரபல வழக்கறிஞர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்ட திரு.வலிட் சுலைமான் மற்றும் கனடாவின் பிரபல பத்திரிகையாளரான பீற்றர் சில்வமன் ஆகியோர் நெறிப்படுத்தும் இக் கருத்தரங்கில்,
கனடாவின் துறைசார், அரசியல் சார் சமூகங்சார் பிரமுகர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்குபற்றி தங்களின் கருத்துக்களைப் பகிரவுள்ளனர். 150 Borough Drive Scarborough ON M1P 4N7 என்ற முகவரியில் அமைந்துள்ள நகரசபையின் மண்டபத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறும்.
கலந்து கொள்ள விரும்புபவர்கள் https://docs.google.com/forms/d/10q_IKWoK0DIc8mYqxpyLZge_EyQG-l18k4DkZhhCuZs/viewform?c=0&w=1 இணைய முகவரியிலோ அல்லது 416-276-2146 என்ற தொலைபேசி இலக்கத்திலோ பதிவுகளை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment