July 3, 2015

நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கிய நகர்வே கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு: சுமந்திரன்!

நாம் அடிமட்ட நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த விளைகிற அதே வேளையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கிய நகர்வே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஆ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குடத்தனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் |முக்கியமாகக் கூறியதாவது:
“பல தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 6 வருடங்களுக்கு முன்பு மே மாதம் 19ம் திகதி முடிவுக்கு வந்தது. எமது மக்களும் எமது பிரதேசமும் பாரிய இழப்புக்களை சந்தித்தனர். யுத்தம் முற்றுப் பெற்றதே தவிர அடக்குமுறைகள் ஓயவில்லைஇ முட்கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட்டவர்களாய் தமது சொத்துக்கள் மற்றும் வாழ்வாதரங்களை இழந்தவர்களாய் தோல்வியை தழுவிய ஒரு சமூகமாய் நின்றனர். இன்னமும் சொல்லப்போனால் அப்போதைய அரசு எமது சமூகத்தை மறுபடியும் தலை நிமிர்த்த முடியாத நிலையில் வைத்திருப்பதை தமது கொள்கையாகவே கொண்டிருந்தது.
இப்படியானதொரு நிலைமையில் எமது சமூகம் சர்வதேசத்திடம் பல உபகாரங்களை எதிர்பார்த்தே தமது நிலைமையை தக்கவைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக எற்றுக்கொள்ளப்பட்டத்தின் விளைவாகவும் பல சர்வதேச சமூகங்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகள்இ ஜெனீவாநகர்வுகள்போன்ற தலையீடுகளினாலும்அரசினால் நமது சமூகத்திற்கு நிரந்தரமாகஏற்படவிருந்த பாதிப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டன.இச்சூழ்நிலையிலேயே எமது மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தரவும் யுத்தம் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து மீள எமது சமூகத்தை கட்டியெழுப்பவுமே 2015முற்பகுதியில் குறித்த காலத்திற்கு 2வருடங்கள் முன்பாகவே இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தினை நாம் எதிர்பார்த்தோம்.
மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கான எமது நிபந்தனையற்ற ஆதரவானது அவர் மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரத்தின் விளைவாக தோற்கக்கூடாதுஎன்பதனைஉறுதிசெய்யவும்இ எமது சமூகம் ஒரு மேம்பாடடைந்த நிலைமையை அடைவதற்கு அவர்வழிவகுப்பார்என்ற எதிர்பார்ப்பின்அடிப்படையிலேயாகும்.
இதனை கவனமாக ஆர்ப்பாட்டமற்ற சொல்லாளுமையினாலும் தலையீட்டாலும் நாம் அடைந்து வருகிறோம்.நாம் எதிர்பார்த்த மாற்றமானது ஜனவரி 8ம் திகதியே ஆரம்பித்ததுடன் இன்னமும் படிப்படியாக நடைபெற்று வருகிறது. இது ஒருவன் நதியின் அக்கரையை அடைய வள்ளம் ஏறிய கதையைப்போன்றது. அக்கரையினை வெற்றிகரமாக அடைய வேண்டுமாயின் சூழ்நிலைகள் மோசமாக இருந்தபொழுதும் வள்ளத்தினை தத்தளிக்க விடக்கூடாது. மாறாக நாம் பயணிக்கும் திசை சரிதானா என்பதனை மாத்திரம் உறுதி செய்துகொள்ளல் வேண்டும்.
அண்மையில் வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு மட்டும்விடுவிக்கப்பட்டதினை குறித்து நாம் முழுமையாக சந்தோஷப்பட முடியாவிடினும் கிழக்கின் சம்பூர் பிரதேச நில விடுவிப்பை நாம் அங்கீகரித்தேயாகவேண்டும். நாம் அடிமட்ட நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த விளைகிற அதே வேளையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கி நகர்வதே சாலச்சிறந்ததாகும். மாற்றத்திற்கான வழியானது பொதுத் தேர்தலையும் தாண்டிய ஒன்று என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிந்துள்ளதோடு மக்களின் நாளாந்தநடைமுறை வாழ்க்கை சவால்களையும் புதிய அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

No comments:

Post a Comment