October 1, 2015

அனைத்துலக நீதிபதியை கொழும்புக்கு அனுப்புகிறது ஜப்பான்!

சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் குறித்து கவனிக்க, அனைத்துலக நீதிபதி ஒருவரை ஜப்பான் இந்தமாதம் கொழும்புக்கு அனுப்பவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இடம்பெற்ற சிறிலங்கா தொடர்பான விவாதத்தின் போது, ஜப்பானிய பிரதிநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கம்போடியாவில் அமைக்கப்பட்ட அனைத்துலக நீதிமன்றத்தின், உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய மோட்டூ நுகுசியே, சிறிலங்காவுக்கு இந்த மாதம் பயணம் செய்யவுள்ளார்.
இவர் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைப் பொறிமுறை தொடர்பாக கண்காணிப்பார் என்று ஜப்பானிய பிரதிநிதி தெரிவித்தார்.
அத்துடன், சிறிலங்கா உண்மையான தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கு ஜப்பான் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment