September 9, 2015

மலை­யக மக்கள் முன்­னணியின் புதிய தலைவர் ராதா­கி­ருஷ்ணன்!

மலை­யக மக்கள் முன்­ன­ணி யின் புதிய தலை­வ­ராக நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­சாமி ராதா­கி­ருஷ்ணன் தெரி­வு­செய்­யப்­பட்­ டுள்ளார்.

நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு அப்பே கம விருந்­கத்தில் இடம்­பெற்ற முன்­ன­ணியின் மத்­திய குழுக் கூட்­டத்­தி­லேயே வேலு­சாமி ராதா­கி­ருஸ்ணன் ஏக­ம­ன­தாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். இரா­தா­கி­ருஸ்­ணனின் தெரி­வி­னை­ய­டுத்து நேற்­று­வரை தலைமைப் பத­வி­யி­லி­ருந்த சாந்­தினி சந்­தி­ர­சே­கரன் அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார்.முன்­ன­ணியின் ஸ்தாபத் தலைவர் அமரர் பெரி­ய­சாமி சந்­தி­ர­சே­க­ரனின் தலை­மைத்­து­வத்­திற்கு கீழ் உரு­வான மலை­யத்தின் முக்­கிய தொழிற்­சங்க மற்றும் அர­சியல் கட்­சி­களில் ஒன்­றான மலைய க மக்கள் முன்­னியின் தலை­மைத்தும் நேற்­று­வரை அவ­ரது பாரியார் சாந்­தினி சந்­தி­ர­சே­கரன் வச­மி­ருந்­தது. இந்­நி­லை­யி­லேயே அப்­ப­தவி தற்­போது கைமா­றி­யுள்­ளது. இதற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக முன்­ன­னியின் செய­லாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் தெரி­வித்தார்.
நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி செயற்­குழுக் கூட்­டத்தில் முன்னாள் தலைவி சாந்­தினி சந்­தி­ர­சே­கரன் கலந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை. பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மலை­யக மக்கள் முன்­ன­னியின் நிதிச்­செ­ய­லா­ள­ரு­மான ஏ. அர­விந்­த­குமார், பிரதிச் செய­லா­ளரும் விரி­வு­ரை­யா­ள­ரு­மான விஜே­சந்­திரன், மத்­திய மாகாண சபை உறுப்­பினர் இ. ராஜாராம், மற்றும் மத்­திய குழு உறுப்­பி­னர்கள் என பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.இது­தொட்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த செய­லாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் கூறு­கையில், அண்­மைக்­கா­ல­மாக தலை­மைத்­துவம் தொடர்பில் ஏற்­பட்ட கருத்து முரண்­பா­டு­க­ளுக்கு தீர்­வு­காணும் பொருட்டே இந்த தீர்­மானம் எடுக்­க­பட்­டது. மறைந்த தலைவர் பெரி­ய­சாமி சந்­தி­ர­கே­க­ரனின் கொள்­கைக்கும் அவர் மலை­யக மக்­களின் மீது வைத்­தி­ருந்த பற்­றுக்கும் ஏற்ப இனி வரும் காலங்­களில் தொடர்ந்து மலை­யக மக்கள் முன்­னணி செயற்­படும். மலை­யக மக்­களின் வளர்ச்சிப் பாதையில் அமரர் சந்­தி­ர­சே­க­ரனின் பங்கு எவ்­வாறு இருந்­ததோ அதே­போன்று எதிர்­கல வேலைத்­திட்­டங்­களும் புரட்­சி­மி­குந்­ததாய் முன்­னெ­டுக்­கப்டும்.
மலை­யக மக்கள் முன்­ன­ணி­யா­னது மலை­யக மக்­களின் பல்­வேறு வளர்ச்­சி­க­ளுக்கு கார­ண­மாக இருந்­துள்­ளது. அதேபோல் மலை­ய­கத்தில் 07 பேர்ச் காணி, தனி வீட்­டுத்­திட்டம் ஊடாக கிராம எழுச்சித் திட்­டத்­தையும் உரு­வாக்­கிய பெரு­மையும் உண்டு. மலை­யக கட்­சி­களில் இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு உல­க­ளா­விய ரிதியில் தீர்வினை பெற்றுக்கொடுக்க பாடுப்பட்ட கட்சியும் இதுவே. அந்த பெருமை அமரர் சந்திரசேகரனையே சாரும். இவ்வாறு மலையகத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சமாதானத்திற்கும் பாடுப்பட்ட இந்த கட்சி எதிர்காலத்தில் புதிய தலைமைத்துவத்தின் கீழ் சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை னெ்றார்.

No comments:

Post a Comment