November 30, 2014

பொலிகண்டி நலன்புரி முகாமுக்குள் வெள்ளம்! – 69 குடும்பங்கள் இடம்பெயர்வு.

கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் உட்புகுந்துள்ளது.
மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த பகுதிக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் தங்கியுள்ளார்கள். வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சனிக்கிழமை பால்மா மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கியுள்ளார்.
வடமராட்சி பொலிகண்டி நலன்புரி முகாமில் உள்ள 69 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
  
இந்த மக்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஊடாக மூன்று வேளை சாப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட பகுதி மக்கள் ‘தாம் பலாலி வடக்கை சொந்த இடமாக கொண்டுள்ளதாகவும் ஆனால் தம்மை இதுவரைக்கும் சொந்த இடத்தில் குடியேற்றப்படாததால் நிம்மதியற்ற வாழ்வு வாழ்கின்றோம்’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment