November 30, 2014

கதிர்காமத்தில் சித்தர்களின் சிலைகள் அழிக்கப்படுகின்றன! – முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு1

”கதிர்காமத்தை தரிசித்த சித்தர்களும் முனிவர்களும்” எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்
இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வடக்கு முதலமைச்சர்,
கதிர்காம பூமி தற்பொழுது பெளத்த மயமாகி வருகிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நாவலர் விழா மற்றும்
  
கதிர்காமத்திற்கு நான் ஒவ்வொரு வருடமும் தரிசிப்பது உண்டு. கடந்த சில வருடங்களாக செல்லவில்லை. கதிர்காமத்தில் அகஸ்த்தியர் முதல் யோகர் சுவாமி வரை தரிசித்தார்கள். ஆனால் அந்த பூமி தற்பொழுது பௌத்த மயமாகி வருகின்றது. எமது அந்த கதிர்காமம் எங்களை விட்டு ஒழிக்கப்படுமோ என்ற அச்சம் எம்முள் நிகழ்கின்றது. அப்பிரதேசம் எமது சித்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட இடம். அங்குள்ள புராதன சித்தர்கள் சிலைகள் அழிக்கப்படுகின்றன. அதற்கு பதிலாக புத்தர் சிலைகள் அதிகரித்து வருகின்றன. 1983களில் இருந்து சிங்கள காடையர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் அதனை அழித்து வருகிறார்கள். ஆனால் நீங்கள் அந்த கதிர்காமத்தை ஒவ்வொரு தமிழரும் தரிசிக்க வேண்டும். அங்கு அவர்கள் எதனை அழித்தாலும் எமது கதிர்காம தெய்வம் எம்மை ஆசிர்வதிப்பதற்கு காத்துக் கொண்டே இருக்கின்றது என்றார்.
கந்தையா நீலகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை அகில இலங்கை இந்து மாமன்றம் ஏற்பாடு செய்திருந்தது. சிறப்பு விருந்தினராக இந்து சமய பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனும் நூலாசிரியர் என்.கே.எஸ்.திருச்செல்வன் மற்றும் ஆங்கில மொழி முலமான ஹிந்துசிசம் வட் இட் ஸ் வட் இட் இஸ் நொட் என்ற நூலை எழுதிய பி.சோமபாலனும் கிழக்கு பல்கழைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ம. பாலகைலாசநாத சர்மாவும் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment