November 30, 2014

பொம்மைவெளி மக்கள் பாதுகாப்பான இருப்பிட வசதி கோரி ஆர்ப்பாட்டம்!

யாழ்.குடாநாட்டில் தொடரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள, பொம்மைவெளிப் பகுதி மக்கள்,
தமக்கு நிம்மதியான வாழ்விடத்தை பெற்றுத் தரக் கோரி இன்றுகாலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனினும் இன்றுவரை எமக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை பெற்றுக் கொடுப்பதில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அக்கறையற்றிருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
  
மேலும் கடந்த 3 தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் உணவு சமைக்கவும், படுத்துறங்கவும் முடியாத நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கையில், அதிகாரிகளுக்கு இந்த நிலமையினை தெளிவுபடுத்தியும் இன்று வரை தம்மை வந்து பார்க்கவோ, அவசர உதவிகளை வழங்கவோ இல்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் மக்கள் யாழ்ப்பாணம் - அராலி வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் அங்கே விரைந்து வந்த பொலிஸார் நிலமையினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.எனினும் மக்களுடைய போராட்டத்திற்கு தடைவிதிக்கவில்லை. இந்நிலையில் யாழ்.பிரதேச செயலர் மற்றும் துறைசார் அதிகாரிகள் வந்து, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment