July 27, 2015

குற்றவாளிகளுக்கு துணைநிற்கும் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்! தமிழ் மக்களே சிந்திப்பீர்!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் இன்னொரு முகம் குறித்த தகவல் எமக்குக் கிடைத்துள்ளது.

2010 ஆம் ஆண்டு வவுனியாவில் வர்த்தகர் ஒருவரை ஆயுதமுனையில் கடத்தி கப்பம் பெறப்பட்ட வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது அந்தவழக்கின் பிரதான சந்தேகநபர்களுக்காக யாழ்மாவட்டத்தில் கூட்டமைப்பின் வேட்பாளராக தற்போது நிறுத்தப்பட்டு இருக்கும் பிரபல சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா இந்த வழக்கில் எதிரிகள் சார்பாக
வாதாடியுள்ளார்.
இப்படிப்பட்ட கொடூரமான சந்தேகநபர்களுக்காக வாதாடும் இந்த வேட்பாளர், சட்டத்தரணி(?) எப்படி எமது தமிழ் மக்களுக்கு சேவை செய்வார் என்பதை மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்.
இந்தச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்பில் இருந்த ஒருவர் மூலமாக இவ்விடயம் அம்பலமாகியுள்ளது. இவ்வாறு எத்தனை சம்பவங்களுடன் இவரோ அல்லது மற்றைய வேட்பாளர்களோ தொடர்புபட்டுள்ளார்களோ…?
தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக குற்றவாளிகள் என்று தெரிந்தும் துணைநிற்பவர்கள் எவ்வாறு மக்கள் பிரதிநிதிகளாக மக்கள் நலன் சார்ந்து செயற்பட முடியும்…?
கடந்தகாலம் என்பது எமக்கான பாடமாகும். அதனை உதாசீனம் செய்யாமல் சமரசமின்றி எங்கள் துன்ப துயரங்கள் நீங்கப்பெற்ற சுதந்திர வாழ்விற்கான போராட்டத்தில் யார் துணை நிற்கிறார்களோ அவர்களை வெற்றிபெறவைப்போம்

No comments:

Post a Comment