கேள்வி: இந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவதற்கான பிரதான காரணம் என்ன?
பதில்: எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து போரின் வெம்மைக்குள் தான் வாழ்ந்து வந்திருக்கின்றேன். விமானக் குண்டு வீச்சுகள், செல் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகளின் மத்தியில் எமது வாழ்க்கை இருந்தது.
மிகுந்த பயந்த சுபாவத்தைக் கொண்டிருந்த நான் ஒரு கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் என்னை ஒரு முழு நேரப் போராளியாக இணைத்துக் கொண்டேன். அப்போது என்னுடைய வயது -15- மட்டுமே. இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த அட்டூழியங்களிற்கெதிராகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் அமைப்பில் நானும் பங்கெடுக்க வேண்டுமென்ற ஒரு உத்வேகமே என்னைப் போராளியாக்கியது. இராணுவத்தை விரட்டினால் நாங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணத்தைத் தவிர இந்தப் போராட்டத்தின் ஏனைய பரிணாமங்களை விளங்கிக் கொள்ளக்கூடிய பக்குவம் அந்த வயதில் எனக்கு இருக்கவில்லை. போராட்டம் ஒவ்வொரு காலகட்டமாக வளர்ச்சி அடைந்தபோது அவற்றுடன் சேர்ந்து போராளிகளும் வளர்ந்தனர். துறைகளும் வளர்ந்தன. இறுதியில் 30 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருந்த ஆயுதப் போராட்டம் 2009 மே மாதம் 18ம் திகதியுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட எங்கள் இனம் சடுதியான ஒரு பின்னடைவுக்குள் தள்ளப்பட்டது. நாங்கள் எங்கள் சொந்த ஊர்களிலேயே ஏதிலிகளாகிப் போனோம். எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், எங்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் எங்களது மீட்பர்கள் என்று நாங்கள் கருதியவர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாமல் போய் விட்டது. எங்களது மீட்பர்கள் என்று நாங்கள் கருதியவர்கள் எங்களில் இருந்து வராமல் எங்கிருந்தோ வந்ததனால் எங்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள், பாதிப்புக்கள், வலிகள் எதனையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. அதனால் தான் போர் முடிந்து 6 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அவர்களால் எம் மக்களிற்கான அரசியல் உரிமைகள் பற்றி, வாழ்வியல் சுதந்திரம் பற்றி உருப்படியான எதையும் மேற்கொள்ள முடியாமல் போய் விட்டது. வெறுமனே நிவாரணம் வழங்குவதன் மூலம் தமது அரசியல் சார் சுய நல அபிலாசைகளை எட்டி விடலாம் என்ற தந்திரோபாய நடவடிக்கைகளையே தொடர்ந்து செய்து வந்தனர். இயலாமை, ஏழ்மை உளவியல் துன்பங்கள் போன்றவற்றால் பலவீனமடைந்திருக்கும் எமது மக்களை சுலபமாக அற்ப சலுகைகளை வழங்குதன் மூலம் ஏமாற்றும் கீழ்த்தரமான யுக்திகளையே கையாண்டு வந்துள்ளனர். இந்த நிலை இன்னும் ஒரு சில வருடங்களிற்குத் தொடருமாயின் உலக அரங்கில் எங்களது பிரச்சனைகள் மெல்ல மறக்கடிக்கப்பட்டு ஒரு காலத்தில் எங்கள் அடையாளங்கள் முற்று முழுதாக மறைக்கப்பட்டு விடும். ஆகவே இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் நான் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணமாகும்.பதில்: எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து போரின் வெம்மைக்குள் தான் வாழ்ந்து வந்திருக்கின்றேன். விமானக் குண்டு வீச்சுகள், செல் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகளின் மத்தியில் எமது வாழ்க்கை இருந்தது.
கேள்வி: இத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நீங்கள் தெரிவு செய்ததற்கான காரணம் என்ன?
பதில்: நான் ஒரு விடுதலைப் போராட்டப் பின்னணியில் இருந்து வந்திருப்பதனால் தமிழ்த் தேசியம் என்ற விடயத்திற்கு மாறாகச் செயற்படும் எந்த ஒரு சக்தியுடனும் இணைந்து நிற்க முடியாது நிற்கப் போவதில்லை. இன்றைய சூழலில் தமிழ்த் தேசியம் என்ற விடயத்தினைக் கையில் எடுத்திருக்கும் சக்திகளாக இரண்டு அமைப்புக்களை நாங்கள் காணலாம். அதில் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னொன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இவ்விரு அமைப்புக்களிலும் தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழ்த் தேசியம் பேசுபவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மக்கள் இனங் கண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களது சுய லாபம் கருதி கால நீடிப்பு அரசியலை மேற்கொண்டிருப்பதால் அவர்களால் எந்த விதமான ஒரு தீர்வினையும் தமிழ் மக்களுக்கு வழங்க முடியாது. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்ற ஒரேயொரு காரணத்திற்காகத் தான் தமிழ் மக்கள் அவர்களிற்கு இதுவரை காலமும் தேர்தல்கள் மூலம் வாக்களித்து வந்திருக்கின்றார்கள். அவர்களும் அதனை நன்றாகத் தேர்தல் காலங்களில் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளிலிருந்தே அவர்களது மனப்பாங்கு மாறி விடும். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடும். யுத்தம் முடிந்து 6 வருடங்கள் கடந்த நிலையில் எம்மக்களுக்கான உறுதியான தீர்வு ஒன்றினை அவர்களால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இவர்களுக்கு மாற்றீடாக எந்த சக்தியும் இல்லாத நிலைமையினைப் பயன்படுத்தி இதுவரை மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றி வந்திருக்கின்றது. இந்த நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுயத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களது உரிமைகள் சார்ந்த வகையில் போராட்டங்களை முன்னெடுத்து தனது இருப்பினை நிலை நிறுத்தி வருகின்றது. எமது மக்களது உரிமைகள் மற்றும் அவர்களது வாழ்வியல் பற்றிய உண்மையான நிலைப்பாட்டினையும், நியாயத் தன்மையினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொண்டிருக்கின்றது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டு வருகின்றது. அந்த நம்பிக்கையினை நானும் கொண்டிருப்பதால் இக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தேன்.

கேள்வி: நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு ஆதரவாளராக இருந்திருக்கின்றீர்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். எனவே நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடாமல் வேறு ஒரு கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் காரணம் என்ன?
பதில்: இதற்கான என்னுடைய பதில் என்னவெனில், நான் முதன் முதலாகத் தேர்தல் என்ற ஒரு விடயத்தைக் கண்ணுற்றது 2004ம் ஆண்டில் ஆகும். அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றியும் ஈட்டியது. அக்காலப் பகுதியில் ஆயுதப் போராட்டம் மேலோங்கியிருந்த காரணத்தினால் அந்தத் தேர்தல் வெற்றியின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு எவ்வாறு அமைந்ததென நான் அறிந்திருக்கவில்லை. 2009 இல் ஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்ததன் பின்னர் 2010 ஆம் ஆண்டில் மீண்டும் நாம் ஒரு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டோம். ஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்ததன் பின்னர் தமிழர்கள் தமது வலுவை நிரூபிப்பதற்கு அனைவரும் ஓரணியில் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை இருந்தது. எனவே மக்கள் விடுதலைப் புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது வாக்குகளை வழங்கி அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களைப் பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள். அந்த வகையில் நானும் கடந்த நான்கு வருடங்களாக அதற்கான ஆதரவினை வழங்கி வந்தேன். அனைவரும் ஒன்றிணைந்து இருந்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எல்லோரையும் போல நானும் நம்பினேன். மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழரசுக் கட்சியாகவோ, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியாக அல்லது அதனுள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளாவோ கருதவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகவே அதனை மக்கள் பார்த்தார்கள். அதன் காரணமாகத் தான் கடந்த காலத் தேர்தல்களில் அவர்கள் தமது வாக்குகளை அளித்து அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தார்கள். தமிழ் மக்களது உரிமைகளுக்காகப் போராடிய ஒரு அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அவர்களை எதிர்த்தவர்களும் இணைந்து செயற்படுகையில் அந்த அமைப்பின் போராளிகளாக இருந்த என் போன்றவர்கள் அதிலிருந்து விலகி இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடும் என்னிடம் இருந்தது. அதனால் நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்தேன். கடந்த காலங்களில் இந்திய இலங்கை அரசுகளுடன் சேர்ந்து வெளிப்படையாகவே ஆயுத ரீதியில் மூர்க்கத்தனமாக அழித்தவர்களும் இணைந்து கொண்டமையை ஒரு நல்ல செயலாகவே கருதிய மக்களும் அவர்களை நம்பி வாக்களித்த்தில் வியப்பில்லை. ஆனால் 2004இல் என்ன நோக்கத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அதன் அடிப்படையினையே மறந்து அதில் இருப்பவர்கள் தமிழரசுக் கட்சியாக, ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆக, ரெலோவாக, புளொட் ஆக தத்தமது தனிப்பட்ட கட்சி நலன்களை முன்னிறுத்துவதில் தான் கவனமாக இருந்தனர். அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரினை ஒரு நிழலாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு பொது அமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட அவர்கள் அந்தப் பொது அமைப்பிற்கு ஒரு தனித்துவத்தினைத் தராமல் தத்தமது தனித்துவ அடையாளங்களைப் பேண முற்படுகின்றமை எமது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படமுடியாததும் மன வருத்தத்தைத் தருகின்ற ஒரு விடயமுமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பிற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைத் தருவதற்கு அவர்கள் யாருமே தயாராக இல்லை என்ற விடயத்தை இந்த நான்கு வருட காலத்துள் நான் அறிந்து கொண்டேன்.
தத்தமது தனித்துவத்தைப் பாதுகாக்க முனைபவர்கள் ஒன்றிணைந்து ஒரு கொள்கையின் அடிப்படையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற அமைப்பினூடாகத் தம்மை அர்ப்பணிப்பதற்கு ஒரு போதும் தயாராக இருக்கப்போவதில்லை என்பதை நான் விளங்கிக்கொண்டேன். 2009இல் போர் முடிவுற்ற காலத்திலிருந்து நடைபெற்று வரும் தேர்தல்கள் அதனை நிரூபித்து வருகின்றன. தத்தமது தனித்துவமான அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி தமிழினத்தின் தேசிய ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் வகையில் அனைத்து நடவடிக்ககைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்னுமொரு விடயத்தை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன். நடந்து கொண்டிருக்கின்ற விடயங்களைப் பார்க்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழரசுக் கட்சியின் ஆளுமைக்குள் தான் அடக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் அது. இதை அவர்கள் மறுதலித்தாலும் அது தான் உண்மை. இந்தத் தமிழரசுக் கட்சியானது 1972 களில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அமைவாக தமிழீழம் தான் முடிந்த முடிவு என மக்கள் கொடுத்த ஆணையினை கிடப்பில் போட்டு விட்டு தங்களது சுய லாபம் கருதிய அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கேற்ப அவர்கள் மேற்கொள்ளும் நகர்வுகள் என்னை மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாக்கின. ஒரு காலப் பகுதியில் மக்களது ஆணையினை தூக்கி எறிந்து தமது எண்ணப்படி அரசியல் நடாத்திய தமிழரசுக் கட்சியினை மக்களும் தூக்கி எறிந்த வேளையில் தான் போராட்ட அரசியல் முக்கியத்துவம் பெற்றது. அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் பின்னால் நிற்கவேண்டிய ஒரு சூழல் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகளாக இருந்திருக்கின்றார்கள் என்பதை மக்களும் அறிந்துள்ளார்கள். வரலாறும் இதனை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
ஆயினும் கால ஓட்டத்தில் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை போராட்டத்திற்கு ஏற்பட்டதால் ஓரணியில் இவர்கள் திரட்டப்பட்டார்கள். ஆனாலும்இன்றுவரை, இந்த நிமிடம் வரை அவர்களிடையே ஒருமைப்பாடு இருக்கின்றதா என்றால் இல்லை என்பதுதான் பதில். தங்களுக்குள்ளேயே ஒருமைப்பாடு காணமுடியாதவர்கள் எப்படி எங்களுக்காக ஒருமைப்பாட்டுடன் இனப்பிரச்சனைக்கான தீர்விற்காகப் போராட முடியும்? இவ்விடயத்தை அமைதியாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் உண்மை நிலை புலப்படும். எனவே மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் சக்திக்குப் பின்னால், அதன் தன்மைகளை முழுமையாகப் புரிந்து கொண்டதன் பின்னர் நிற்பது என்பது ஏற்புடையதன்று. தமது நாற்காலிக் கனவுகளை நிரந்தரமாகத் தக்க வைப்பதில் மட்டுமே கவனமாக இருந்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை மட்டுமல்லாது போராளிகளது பொது மக்களதும் அளப்பரிய தியாகங்களையும் அதற்கு வலுச்சேர்க்கவே பயன்படுத்திக் கொண்டனர்.
எமது விடுதலைப் போராட்டத்தில் இணைந்திருந்த பல்லாயிரக் கணக்கான போராளிகளில் நானும் ஒரு அங்கமாக குறித்த காலப் பகுதிவரை இருந்திருக்கின்றேன். இந்த நிலையில் என்னால் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தான் நான் அங்கிருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.

கேள்வி: இந்தத் தேர்தலில் மக்கள் உங்களைத் தெரிவு செய்யவேண்டும் என்பதற்காக நீங்கள் கூறும் காரணங்கள் என்ன?
பதில்: ஒரேயொரு காரணம் தான் நான் கூற முடியும். நான் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை உங்களில் இருந்து அந்நியப்பட்டிருக்கவில்லை. போராட்ட காலங்களில் இருந்து இறுதி வரை மக்கள் மத்தியில் வாழ்ந்திருக்கின்றேன். ஆகவே மற்றவர்களை விட என்னால் மக்களை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும், அவர்கள் உளப் போராட்டங்களைப் புரிந்து கொள்ள முடியும். மக்கள் வாழ்வியல் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியும். வாய் மூலம் பேசுவதை விட செயல்கள் மூலம் மக்களுடன் பேச விரும்புகின்றேன். மக்களுடன் மக்களாக இணைந்தே எனது அரசியல் பயணத்தை நான் ஆரம்பிக்க விரும்புகின்றேன். இந்த முயற்சியில் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

துவாரகா கலைக்கண்ணன்
No comments:
Post a Comment