August 3, 2016

யாழ்.பல்கலைக்கழக மோதல் - மேலும் பல மாணவர்களின் விபரங்களைத் திரட்டுகிறது பொலிஸ்!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப்பாய் பொலிஸார், மேலும் சில மாணவர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தமிழ் மாணவர்கள் சிலருடைய பெயர்விபரங்களை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் கோரிப் பெற்றுள்ளனர்.

 
கடந்த மாதம் 16ம் திகதி யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்கள்வரவேற்பு நிகழ்வில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றது. இம் மோதல் சம்பவத்தினை அடுத்து கொழும்பு வைத்திய சாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள மாணவர் தன்னை மூன்று தமிழ் மாணவர்கள் தாக்கியதாகபொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை கைது செய்யபொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்துபிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் நான்கு சிங்கள மாணவர்கள் தன்னைத் தாக்கியதாக யாழ். பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத் தலைவர் அவர்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்தார். இந்நிலையில் இரு மாணவர்கள் குழுக்களாலும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டப்பட்ட 4 தமிழ்மற்றும் 4 சிங்கள மாணவர்கள் அடங்கலாக 8 பேருக்கு எதிராக யாழ். நீதவான்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக தமிழ் மாணவர்களை இம்மாதம் 25ம் திகதிவியாழக்கிழமையும், சிங்கள மாணவர்களை எதிர்வரும் செம்டெம்பர் மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமையும் மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் மோதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும்கோப்பாய் பொலிஸார் மேலும் சில மாணவர்களுடைய பெயர் விபரங்களை திரட்டும்நடவடிக்கைககளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவர் ஒன்றியத்தினர் உட்பட மேலும் சில தமிழ் மாணவர்களுடைய விபரங்களே பொலிஸாரினால் சேரிக்கப்பட்டு வருவதாக யாழ்.பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment