சில புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை
நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சு வட்டாரத் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருந்தது.
16 அமைப்புக்களுக்கும் 424 தனிப்பட்ட நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மக்களின் உரிமைகளுக்காக போராடிய மற்றும் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட சில அமைப்புக்களும் தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த தடை விதிப்பின் போது உயிரிழந்த சிலரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் செயற்படாத புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கான தடையை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

No comments:
Post a Comment