October 8, 2015

அமெரிக்காவில் 6 ஆயிரம் சிறைக்கைதிகளுக்கு விடுதலை!

அமெரிக்க சிறைகளில் இருக்கும் 6 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.அமெரிக்காவின் தண்டனை விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களின் காரணமாக போதைப் பொருள்
குற்றவாளிகளுக்கு தண்டனைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் 1980-ல் இருந்து 1990 வரை போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, இந்த மாத இறுதியில் இவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment