October 8, 2015

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சம்பந்தன்!

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்  சம்பந்தன் இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.

சீனாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்த உத்தேச உடன்படிக்கை குறித்து உரையாற்றுகையிலேயே இவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தை சட்ட முறைமைக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரசியல் கைதிகள் விடயம் குறித்து ஏற்கனவே நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கும் தாம் அறிவித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவரையும் கோரியுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment