May 3, 2015

படைவாகனம்சிறுமியை மோதி தள்ளிய தப்பிக்க முற்பட்டதையடுத்து பதற்றம்!

வீதியால் சென்று கொண்டிருந்த சிறுமியொருவரை மோதி படுகாயமடைய வைத்ததுடன், அங்கிருந்து தப்பித்து செல்ல படையினர் முற்பட்டமை
அம்பலமாகியுள்ளது.யாழ்ப்பாணம் அராலித்துறை வீதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தேவராசா தேனுஜா (13) என்ற சிறுமி தனியார் கல்வி நிலையத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை வீதியால் வந்த இராணுவ ட்ரக் வண்டி அவரை மோதித்தள்ளியுள்ளது. சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆத்திரத்துடன் ஒன்றுகூடி வாகனத்தை முற்றுகையிட முயன்றனர்.

மக்களை அங்கு நிற்கவிடாமல் இராணுவத்தினர் விரட்டிவிட்டு, வாகனத்தை அப்புறப்படுத்த முயன்றனர். எனினும், பொதுமக்கள் அதனை அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகிலுள்ள முகாமிற்கு தகவல் அனுப்பப்பட்டு மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் மக்களை அங்கிருந்து விரட்டி மிரட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment