தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க
முன்னாள் போராளிகளின் போருக்கு பிந்திய வாழ்க்கை நிலை குறித்து விரிவாக
ஆங்கிலத்தில் புத்தகம் எழுதுகின்றார் பிரசித்தி வாய்ந்த சுயாதீன
ஊடகவியலாளர் ரஞ்சித் ஜெ. பெரேரா.
2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தது தொடக்கம் இவர் இதற்கான தகவல்களை அக்குவேறு ஆணி வேறாக சேகரித்து வருகின்றார்.
குறிப்பாக புனர்வாழ்வு வழங்கப்பட்டு, சமுதாயத்தில் வாழ அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற பெண் போராளிகளின் பேட்டிகள் கண்ணீரை வரவழைப்பனவாக உள்ளன.
தாயகத்தை கடந்த 03 தசாப்த காலத்துக்கும் மேலாக ஆக்கிரமித்து இருந்த யுத்தத்தின் பின்னணி குறித்தும் இந்நூலில் ஆராய்கின்றார்.
போருக்கு பிந்திய அமைதிச் சூழலில் தேசிய நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் நூலில் பேசப்படுகின்றது.
வட மாகாணத்தில் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தை சேர்ந்த இளையோர்களே உரிமைப் போராட்டத்துக்கு அதிகம் பங்களிப்பு வழங்கி உள்ளனர் என்பது இவரின் அவதானமாக உள்ளது.

No comments:
Post a Comment