April 6, 2015

மூதூர் பிரதேசசபைக்குட்பட்ட இந்து ஆலயங்கள் அழிவடையும் நிலையில் – மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் தெரிவிப்பு!

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள இந்து ஆலயங்கள் பல காலமாக உரிய முறையில் பேனப்படாது பாழடையும் நிலையில் காணப்படுவதாகவும் இதனால் இந்துசமய விழுமியங்கள் அழிவடைந்து செல்வதாக மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் குருக்கள் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த பகுதியில் 1983 ஆண்டு காலப்பகுதியில் 190 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளதாகவும் அக் காலப் பகுதியில் 3 இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டு அப் பகுதி மக்களினால் சிறந்த முறையில் பேணிப் பாதுகாக்கப்படடு பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.
பின்னர் நாட்டில் ஏற்பட்ட போர்சூழலினால் இடப்பெயர்வுகள் ஏற்பட்டன. இதன் போது குறித்த கோயில் விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளதுடன் கோயில்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.
மேலும் பிற்பட்ட காலப்பகுதியில் குறித்த பகுதியில் தமிழ் மக்களுடைய எண்ணிக்கை குறைவடைந்து கோயிலைப் போணிபாதுகாப்பதற்கான பொருளாதரமும் ஆட்பலமும் குறைவடைந்துள்ளது. இதனால் கோயில் விக்கிரகங்கள், பொருட்கள் என பெறுமதிமிக்க பொருட்களும் களவாடப்பட்டு வந்துள்ளன.
தொன்மையான இந்து ஆலயங்கள் மீது திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதுடன் பாழடைந்து செல்லும் கோயில்களை மீண்டும் புதுப்பொலிவாக மாற்றாமல் இருப்போமானால் எமது மதத்தை நாமே சீரழித்த நிலைக்கு கொண்டு சென்றுவிடுவோம்.
ஆகவே குறித்த பகுதியிலுள்ள மக்கள் மற்றும் அனைத்து இந்து மக்களும் ஒன்றுபட்டு பாழடைந்து செல்லும் கோயிலை திருத்தி பூசை வழிபாடுகளை மேற்க்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
இதேவேளை, குறித்த பகுதியிலுள்ள அறநெறிப் பாடசாலையில் நேற்று காலை மூதூர் இந்து குருமார் சங்கம்; மற்றும் நான்கு இந்துசமய அமைப்புக்களும் ஒன்றிணைந்து ‘அழிந்து செல்லும் இந்துக்கோயில்களை பேணிப் பாதுகாப்போம் ” என்ற தலைப்பில் அமைந்த கருத்தரங்கு மேற்க்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் அழிவடைந்து செல்லும் நிலையிலுள்ள கோயிலை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்வதற்கான தீர்வுத்திட்டமும்; முன்னெடுக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment