இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் காலை யாழ்.நகரில் கவனயீர்ப்பு
ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி யாழ்.மத்திய பேருந்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினைக் கோரி, கைதிகளின் உறவினர்கள் மற்றும் பிள்ளைகள், மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதன்போது விடுதலைப் புலிகளுக்கு உதவி னார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், கைது செய்து வைத்திருக்கும் எங்கள் உறவுகளை விடுதலை செய்யுங்கள்,
விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுக்கு மன்னிப்பு கொடுத்திருக்கும் அரசாங்கமே எதுவுமறியாத எங்கள் பிள்ளைகளை எதற்காக தடுத்து வைத்திருக்கின்றாய்?...
எனக்கேட்டு உறவினர்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது, பின்னர் புதிய சந்தை வழியாக நகரை ஊர்வலமாக வந்து நிறைவு பெற்றது. சர்வதேச சிறைக்கைதிகள், தினத்தை முன்னிட்டே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.











No comments:
Post a Comment