July 7, 2016

புதைக்கப்பட்ட நிலையில் பல இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

கல்பிட்டி - குடாவ கடற்பரப்பில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவினை புத்தளம் பொலிஸ் விசேட பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.


கல்பிட்டி விஜய கடற்படை இராணுவ முகாமிற்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே குறித்த 85 கிலோ கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இவர்கள் மீனவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு கஞ்சா கடத்தும் வேலையை முன்னெடுத்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment