வடக்கிலுள்ள சில பௌத்த மத வழிபாட்டுத் தலங்களை அகற்றுவதற்கு வட மாகாணசபை எடுத்துள்ள தீர்மானம் அநீதியானது என வட, கிழக்கு மாகாணங்களுக்கான பிரதான மாநாயக்கர் சியம்பலகஸ்வௌ விமலசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசாங்கத்திற்கும், பௌத்த மாநாயக்க தேரர்களுக்கும் எழுத்து மூலம் அவர் அறிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் இந்த தீர்மானம் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அறிவித்துள்ளார்.
வடக்கில் 13 பௌத்த விஹாரைகள் காணப்படுவதாக வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்து பிழையானது என்றும், பௌத்த மத விவகார அமைச்சில் பதிவு செய்யப்பட்ட 29 விஹாரைகள் வவுனியாவில் மட்டும் காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாக விஹாரை, நாகதீபம் ஆகிய விஹாரைகளும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பல பௌத்த விஹாரைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment