காணாமல்போயுள்ளதாகக் கூறப்பட்டு வெளிநாடுகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பாக, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பதற்கு காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
காணாமல் போனோர் அலுவலகத்திற்குரிய அதிகாரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் இந்த சந்திப்பின்போது கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, “காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு வெளிநாட்டவர்கள் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள். தற்போது அந்த நிறுவனத்திற்கு 7 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்களே ஆவர். வெளிநாட்டவர்களின் உதவிகளைப் பெறும் பட்சத்தில் அதுதொடர்பில் உரிய ஒப்பந்தங்களும் செய்துகொ்ள்ளப்படும். காணாமல் போயிருப்பதாகக் கூறப்பட்டு, வெளிநாடுகளில் தங்கியிருப்போரை கண்டுபிடிக்கம் வகையில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு சர்வதேச பொலிஸாரின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

No comments:
Post a Comment