பம்பலப்பிட்டி பகுதியில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் மாவனல்ல பிரதேசத்தில் நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு, இவரது சடலம் அடையாளம்காணப்பட்டதா பொரிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவனல்ல பகுதியில் அடையாளம் காணமுடியாத இளைஞர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், குற்றப் புலனாய்வு பொலிஸார் குடும்பத்தாருடன் மாவனல்ல பிரதேசத்திற்கு சென்றனர். இரவு 10 மணியளவில் அங்கு காணப்பட்ட சடலம் கடத்தப்பட்ட வர்த்தகருடையது என அவருடைய குடும்பத்தார் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவனல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கடத்தல் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வர்த்தக ரீதியான பகை காரணமாக இந்த கொலை இடம் பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் தாம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் பம்பலப்பிட்டி வர்த்தகரான மொஹமட் சுலைமான் என்பவர் காணாமல் போனதாக முறையிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் கடத்திச்செல்லப்பட்டதாகவும், அவரை விடுவிப்பதற்காக பெருந்தொகை பணம் கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையிலேயே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment