August 25, 2016

தனது தந்தை கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டத்தை நியாயப்படுத்தும் சந்திரிகா!

எனது தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க 1956ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டம் இனவாதத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவில்லை.
சுமார் 450 வருடங்களாக வெளிநாட்டவர்களின் பிடியில் இருந்து இலங்கையின் அடையாளத்தை உறுதிப்படுத்தவே அந்த தீர்மானத்தை அவர் எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், சுதந்திரத்தின் பின் 8 வருடங்கள் கழித்து சனத்தொகையில் 75 வீதமாக இருந்த சிங்கள மக்கள், தாம் தமிழர்களால் அல்லது முஸ்லிம்களால் புறக்கணிக்கப்படவில்லை. எனினும் வெள்ளையின ஆட்சியாளர்களால் புறக்கணிப்பட்டதாக உணர்ந்தனர். எனவேதான் அவர்களுக்கு அவர்களின் மொழியை முன்னிலைப்படுத்தி அடையாளம் காண்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் பெரும்பான்மை மக்களின் மொழியை மாத்திரம் இரண்டு சமூக மக்களின் மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும். 1956ஆம் ஆண்டு ஆட்சியாளர்கள், தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தபோதும் அது உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனையடுத்து பதவிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் தமிழ் மொழி தொடர்பான முன்னுரிமையை வழங்கவில்லை. எனினும் தமது அரசாங்கம், போரின் மத்தியிலும் அந்த விடயத்தை கையாண்டு தமிழ் மொழியாளர்களை அரசாங்கத்துறைக்குள் உள்ளீர்த்தது என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment