மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3ஆம் பிட்டி பிரதான வீதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் வழங்கியுள்ளதாக அப்பிரதேச மக்கள் முறையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
குறித்த காணி சுமார் 2 ஏக்கர் கொண்டது எனவும், இன்று மதியம் நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் நில அளவை செய்யப்பட்டு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி தேவை என இராணுவத்தினர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளாரிடம் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்நிலையில், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு மன்னார் - யாழ் பிரதான வீதியில் உள்ள மூன்றாம் பிட்டி சந்தியில் சுமார் 2 ஏக்கர் காணியினை இராணுவத்தின் தேவைக்காக வழங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனால் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன் பிட்டி, மூன்றாம் பிட்டி மற்றும் அதனை அண்மித்த கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக எதிர்வரும் நாட்களில் பெண்கள் இரவு நேரங்களில் தனிமையில் குறித்த பகுதியில் பயணிக்க அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதும் தற்போதும் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது. கடந்த ஆட்சியை விட தற்போதுள்ள ஆட்சியில் மக்களின் காணி அதிகளவு சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, காணி இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதை பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment