சிங்கள மாணவர்களை தாக்கிய சம்பவத்தின் பின்னணியில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தமிழ் அடிப்படைவாதிகள் மற்றும் இனவாதிகளுமே உள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் கூட இவ்வாறான சம்பவங்கள் நடக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
உத்தேச அரசியலமைப்பு திருத்தமும் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் செயலாகும் இனவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் துணைச் சென்று நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் போக்கை உயிரை கொடுத்தேனும் நிறுத்த வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.
ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று திங்கட் கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகையில்,
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நல்லாட்சி என்ற கூட்டாட்சி பதவியேற்று ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. ஆனால் தேன்நிலவு காலத்திலேயே இந்தளவு பிரச்சினை என்றால் என்ன செய்வது. நாட்டில் நல்லிணக்கம் என கூறி இருந்த அமைதியையும் நல்லாட்சி அரசாங்கம் சீர்குலைத்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதிகளில் இருந்த புத்தகங்கள் உள்ளிட்ட உடமைகள் கூட தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. புலனாய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை தாக்கியதாகவே தற்போது செய்திகள் வெளியாகின்றன.
தமிழ் ஊடகங்கள் உண்மைக்கு முரணான செய்திகளை வெளியிட்டுள்ளன. சிறு தாக்குதலுக்கும் குரல் கொடுக்கும் சிவில் அமைப்புகள் இன்று மௌனித்து போயுள்ளன. பிரபாகரன் இருந்த காலத்தில் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. புலிகளுக்கு உயிர் கொடுக்க முற்படும் சக்திகள் நாட்டில் இன்று வீரியத்துடன் செயற்படுகின்ற நிலையில் நல்லாட்சி அரசாங்கம் அனைத்தையும் மூடி மறைத்து வருகின்றது.
சம்மாந்துறை பகுதியிலும் பொலிஸார் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. இவ்வாறு நாட்டில் நெருக்கடியான சூழல் காணப்படுகின்ற நிலையில் செயிட் அல் ஹுசைனுக்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் திருப்தியளிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கவும் நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது. மேலும் இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு நாட்டை பாரிய பொருளாதார பாதாளத்தில் தள்ளிவிட அரசாங்கம் முயற்சிக்கின்றது.
நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களுக்கு விசேட நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்கும் சதி முன்னெடுக்கப்படுகின்றது. இவற்றை தோல்வியடைய செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment