July 29, 2016

பாதயாத்திரையில் பயணிப்போர் வன்முறையில் ஈடுபட்டால் கலைக்கப்படும் அதிகாரம் பொலிசாருக்கு ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் போது வன்முறைகள் நடைபெற்றால் அதனைக் கலைக்கும் அதிகாரம் நீதிமன்றத்தின் ஊடாக பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.


கேகாலை நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவை அடுத்து மாஜிஸ்திரேட் நீதிபதி கிஹான் மீகககே இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இரண்டாவது நாளான இன்று பாதயாத்திரை கேகாலை நகரின் ஊடாக பயணிப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொலிசாரினால் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நகரின் மையப் பகுதி ஊடாக பாதயாத்திரை மேற்கொள்ளப்படும்போது பொதுமக்களின் அமைதி கெடுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என்று பொலிசார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

எனினும் இவற்றை நிராகரித்த நீதிமன்றம், கண்டி-கொழும்பு நெடுஞ்சாலையின் ஒருபக்க வழிப்பாதை ஊடாக பாதயாத்திரையை மேற்கொள்ள இடமளிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரம் பாதயாத்திரையில் பயணிப்போர் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களைக் கலைக்கும் அதிகாரம் கேகாலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் நீதிமன்றுக்கு அறியத் தருமாறும் பொலிசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment