July 29, 2016

நல்லிணக்க பொறிமுறை செயலணியின் கருத்தறியும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில்!

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறை செயலணியினரின் மக்கள் கருத்தறியும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை காலை 9.00 மணிக்கு கரைச்சி பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு எற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக குறித்த செயலணியிடம் கருத்துக்களை முன்வைத்து  வருகின்றனர் .

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குறித்த குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றன

அந்தவகையில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களிடம் கருத்தறியும் செயற்பாடு கடந்த 9ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 19ஆம் திகதி திருகோணமலையிலும், 26 ஆம் திகதி முல்லைத்தீவிலும் இடம்பெற்றுள்ள நிலையில் நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

ஸ்ரீலங்காவில் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களிடம் கருத்தறியும் செயற்பாடுகளை ஆரம்பித்த குறித்த குழுவினர் தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்துக்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment