ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நம்பிக்கையின் சுடர் பேரணியின்மூன்றாம்இன்றாகும்.
வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மற்றும் நியூஸ்பெஸ்ட் ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணிக்கு, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன.
நம்பிக்கையின் சுடர் பேரணி புத்தளத்தில் பயணத்தை ஆரம்பித்தது.
புத்தளம் உதவி பிரதேச செயலாளர் எஸ்.டீ.வீரசிங்கவின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
புத்தளம் புனித அன்ரூ கல்லூரி வீராங்கனைகள் சுடர் பேரணிக்கு ஆதரவு வழங்கினர்.
நம்பிக்கையின் சுடர் பேரணிக்கு நொச்சியாகமயில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும்
வீராங்கனைகளுக்கு நாட்டின் அனைத்து மாவட்ட மக்களினதும் வாழ்த்துக்களைப் பெறும் நோக்கில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீராங்கனைகளுக்கு நாட்டின் அனைத்து மாவட்ட மக்களினதும் வாழ்த்துக்களைப் பெறும் நோக்கில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கையின் சுடர் பேரணி அநுராதபுரத்தில் நிறைவுற்றது.
இப்பேரணி இன்றுஅநுராதபுரத்தில் ஆரம்பமாகி மன்னாரில் நிறைவுபெறவுள்ளது.
No comments:
Post a Comment