இராணுவப் புலனாய்வுப் பிரிவு பற்றிய இரகசியங்கள் கோரப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக இவ்வாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவு இரகசியங்கள் கோரப்பட்டுள்ளன.
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி வரையிலான காலப் பகுதியில், இராணுவப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சகல நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வழங்குமாறு இராணுவ சட்டப் பிரிவிடம், புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப்பிரிவு முகாம்களின் அமைவிடங்கள், கட்டளையிடும் அதிகாரியின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள், புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்காக தொலைபேசி வழங்கிய அதிகாரி, பயன்படுத்திய சகல வாகனங்கள், அதன் உரிமையாளர்கள் பற்றிய விபரங்கள் ஆகியனவற்றை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
மிகவும் இரகசியமான முறையில் இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து நபர்கள், அதிகாரிகள் பற்றிய சகல விபரங்களும் இதன்படி புலனாய்வுப் பிரிவின் கைகளுக்கு செல்ல உள்ளது.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த விக்ரமதுங்க அத்திடிய பிரதேசத்தில் வைத்த கொலை செய்யப்பட்டிருந்தார்.

No comments:
Post a Comment