உள்ளக விசாரணைப் பொறிமுறைமை குறித்து எதிர்வரும் 28ம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விளக்கம் அளிக்க உள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட உள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறைமை குறித்து இந்த விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்க உள்ளார்.நல்லிணக்க விவகாரம் தொடர்பில் கடமையாற்றி வரும் மனோரி முத்தெட்டுவேகமவும் வெளிவிவகார அமைச்சருடன் ஜெனீவா விஜயம் செய்ய உள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்ஈழத்திற்கு ஆதரவான புலம்பெயர் தரப்புக்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் 12 அரச சார்பற்ற நிறுவனங்களும் இதனை எதிர்த்து வருவதாகவும் சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment